சிதம்பரம் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
சிதம்பரம், ஜன. 12- சிதம்பரம் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7.55 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். ரூ.5.77 கோடியில் தினசரி காய்கறி அங்காடி, ரூ.66 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட ஆயிகுளம், ரூ.60 லட்சத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கூடுதல் கட்டிடம் மற்றும் கொத்தங்குடி தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையேற்று இப்பணி களைத் திறந்து வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் நேரு, கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக ரூ.1,500 கோடிக்கும் மேலான வளர்ச்சிப் பணி கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ சிந்தனை செல்வன், மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி ஆணையர் மல்லிகா, சி.பி.எம் நகர் மன்ற உறுப்பினர் தஸ்லீமா உள்ளிட்ட அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகரின் முக்கிய பிரமுகர்கள், அனைத்துகட்சிகளின் பிரதிநிதிகள் தலைவர்கள், சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர், ஜமாத் தலைவர்கள், வணிகர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் என திரளாக கலந்து கொண்டனர். இதில் கொத்தங்குடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறையை நகராட்சி 21-வது வார்டு உறுப்பினர் தாரணிஅசோக் குத்து விளக்கு ஏற்றி வரவேற்று அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரி வித்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி னர் இதில் மாவட்ட, வட்டார தொடக்க கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர்கள் காட்டு மன்னார்கோயில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேரூ ராட்சி அலுவலகம் உள்ளிட்ட ரூ 8 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
