tamilnadu

img

அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் வழக்கு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்தித்த  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `DMK Files' என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் அவதூறான கருத்துகளை வெளியிட்டார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.