சென்னை
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் காலை 6 மணியிலிருந்து மதியம் 2.30 மணிவரை அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வரத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மற்ற நேரங்களில் வெளியே வந்தால் வாகன பறிமுதல் மற்றும் வழக்குப் பதிவு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க வைப்பதற்கான கால அவகாசம் குறைக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில்," பொதுமக்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.