பள்ளி மாணவன் மரணம்
ராணிப்பேட்டை, செப்.24 - திமிரி, தாமரைப்பாக்கம் புதிய காலனியைச் சேர்ந்த மணிகண்டன் - தீபா தம்பதியின் மகன் மிதுன் (7) மதியம் உணவை அருந்திய பிறகு முகம் வீங்கிய நிலையில் உயிரிழந்தார். திமிரி காவனூர் சாலை எஸ்.பி பேட்டையிலுள்ள தனது பள்ளிக்கு சென்றுள்ளார். மதிய உணவு அருந்திய பிறகு மிதுன் முகம் வீங்கியவாறு இருந்ததைக் கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து திமிரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மிதுன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு நகர காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.