வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான(SIR) படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன்(டிச.11) முடிவடைகிறது.
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கான படிவங்கள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இந்த படிவத்தை நிரப்புவதில் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்களும், குழப்பங்களும் இருந்தன. இதில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டிகளை முன்வைத்துவருகின்றனர்.
இந்நிலையில் SIR படிவத்தை நிரப்பிச் சமர்ப்பிப்பதற்கான இறுதிநாள் டிசம்பர் 4 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கால அவகாசம் வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் டிசம்பர் 11 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசமானது நாளையுடன் முடிவடைகிறது.
மேலும் வருகின்ற 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
