இந்தியாவின் மொழிக்கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி புதின் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புதின் கடந்த 4 ஆம் தேதி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார். புதின் மோடியுடனான இந்த சந்திப்பில் உக்ரைன் - ரஷ்யா போர், தொழில் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சம்பந்தமாக பேச்சுவாத்தை நடைபெற்றது.
இந்திய பயணம் குறித்து பேசிய புதின்;
சில நாட்களுக்கு முன்பு இந்தியா சென்றிருந்தேன் அங்கு 150 கோடி மக்கள் வசிக்கின்றனர் ஆனால் அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் வெவ்வேறு மொழிகளை பேசுகின்றனர். இந்த சிறப்பான பன்முகத்தன்மையையும், வேற்றுமையில் ஒற்றுமையையும் பாதுகாப்பது மிகவும் அவசியம், என இந்தியாவின் மொழிக் கலாச்சாரம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
