tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்...   மதுரையில் மீண்டும் வேகமெடுக்கும் பாதிப்பு...

சென்னை 
இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு92,206 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 22 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,969 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 5,486 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து அதிகபட்சமாக விருதுநகரில் 423  பேருக்கும், செங்கல்பட்டில் 419 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

மற்ற மாவட்டங்களில்... 

திருவள்ளூர்  - 378

காஞ்சிபுரம்  - 349

மதுரை  - 326

தூத்துக்குடி  - 308

கன்னியாகுமரி - 266

தேனி  - 234

ராணிப்பேட்டை  - 222

திருச்சி  - 217

கோவை  - 189

தஞ்சாவூர் - 186\

கள்ளக்குறிச்சி  - 179 

வேலூர்  - 174

நெல்லை  - 170

விழுப்புரம்  - 164

திருவண்ணாமலை  - 134

சேலம்  - 121

திருவாரூர்  - 96

புதுக்கோட்டை  - 95

தென்காசி  - 93

கடலூர்  - 91

மற்ற மாவட்டங்களில் 90-க்குள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டும் இன்று (வெள்ளி) கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கில் உள்ளது.  கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு மந்தமாக இருந்த நிலையில், மீண்டும் அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கு மொத்த 10 ஆயிரத்தை (9,302) நெருங்கி வருகிறது.