சென்னை:
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கிவிட்டது. சென்னையில் மட்டும் 874 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன்நிறைவடைய உள்ள நிலையில் நீட்டிக்கப்படுகிறது.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை. கொரோனா பரவலை பொறுத்து மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளலாம். சர்வதேச விமானசேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிசெலுத்தும் பணிகளை விரைவுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.