weather

img

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை : வெப்பச்சலனத்தால் வாய்ப்பு...

சென்னை
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தற்போதே அக்னி நட்சத்திரம் போல வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்றும் வீசுகிறது. ஒரு சில இடங்களில் லேசாக மழை பொழிந்து வந்தாலும், திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடும் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் நற்செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,"உள் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு. இன்று முதல் 9-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் மிதமான மழை 10ஆம் தேதியும் 11ஆம் தேதியும் தென் தமிழகம், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்"என தெரிவிக்கப்பட்டுள்ளது.