tamilnadu

img

மிக்ஜாம் புயல்: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு!

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இந்த சூழலில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறையால் 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பொதுவிடுமுறை அளிக்க கோரி தனியார் நிறுவனங்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக டிசம்பர் 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் மீண்டும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.