அமெரிக்காவை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
வெனிசுலா அதிபர் மதுரோவை அராஜகமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ள அமெரிக்காவையும், அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சிபிஎம் தலைவர்களை குண்டுக்கட்டாக கைது செய்ததை கண்டித்தும் திங்களன்று (ஜன.5) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் கந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பகுதிக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்த சிறையில் அடைத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் செயலை கண்டித்து சிஐடியு வேலூர் மாவட்டக்குழு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் முன்பு மாவட்ட தலைவர் டி.முரளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், பொருளாளர் எம்.கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் மு.காசி, வி.நாகேந்திரன், சி.சரவணன் கண்டன உரையாற்றினர்.
வெனிசுலா அதிபரை கைது செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (ஜன 5), கும்மிடிப்பூண்டியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், எம்.காமாட்சி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். மீஞ்சூரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ்குமார், சிஐடியு நிர்வாகிகள் ஜி.வினாயகமூர்த்தி, அனீப் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
