சென்னை:
அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூர் மற்றும்சென்னையில் உள்ள வீடு-அலுவலகம் உள்ளிட்ட 21 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ள இவர், சாயப்பட்டறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்திவருகிறார்.போக்குவரத்துத் துறைக்கு அமைச்சராக இருந்தபோது வாகனங்களுக்கு வேகக் கட்டுப் பாட்டு கருவி வாங்குவதற்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மேலும் கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்றும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அதிமுக அமைச்சர் கள் மீதான ஊழல் பட்டியல் ஆளுநரிடமும் அளிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் போக்குவரத்துத் துறையில் நடைபெற்றஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இத்துடன், அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல்தொடர்பாக ஒன்றிய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கும் பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில், தமிழகத் தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். திமுக தேர்தல்அறிக்கையில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், போக்குவரத் துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 21 இடங்களில் வியாழனன்று (ஜூலை 22)லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள்சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் புட்டபர்த்தி சத்ய சாய்பாபா கோவில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக 2-வது தளத்தில்உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்புஅதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த தகவலை அறிந்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன்உள்ளிட்டோர் சென்னையிலுள்ள விஜயபாஸ்கர் இல்லத் துக்கு படையெடுத்தனர்.கரூர் ஆண்டாள்கோவில் கிழக்கு ஊராட்சி செல்வன் நகரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அவரது வீட்டு அருகில் உள்ள சாய பட்டறை, சகோதரர் ரெயின்போ சேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கரூர் தோரணகல்பட்டியில் வசித்து வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலரான ஏகாம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.எம்.ஆர்.விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து கழகத்துக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட்டன.பணிநியமனங்களும் மேற்கொள்ளப் பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள்வெளியாகின. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, “21 இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆனால் ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை” என்று கூறினார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர் பாக கரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கும் பதிவு செய்துள்ளதால், மேலும் பல முன் னாள் அதிமுக அமைச்சர்களின் வீடு, அலுவலகங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.