சென்னை, ஜூலை 29- சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களை தனிமைப்ப டுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடக் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களை தனி மைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரி யிருந்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு குறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தர விட்டுள்ளனர்.