tamilnadu

கட்டிட தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் வழங்க கோரிய வழக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 10- தமிழக கட்டிட தொழிலாளர் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத் தில் கட்டிடத் தொழிலாளர்கள் இந்த கொரோனா தொற்று காலத்தில் வேலை இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் வீதம் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களது வாழ்க்கை தினசரி வேலையின்றி கடந்த 3 மாதமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கி யுள்ள ரூ.1000 என்ற தொகை போதுமானதாக இருக்காது. எனவே கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்.மேலும் கட்டிடத் தொழிலா ளர்கள் பெரும்பாலும் அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால் இவர்கள் தங்களது பதிவினை புதுப்பிக்காமல் உள்ளனர்.

மேலும் கட்டிட தொழிலாளர்கள் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு புலம் பெயர்ந்து தான் தொழிலை பார்த்து வந்த னர். இதனாலும் பெரும்பாலான தொழிலா ளர்கள் தங்களது பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். அவ்வாறு புதுப்பிக்காமல் உள்ள தொழிலாளர்களுக்கும் ரூ,5,000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். தில்லி அரசு, கட்டிடட தொழிலாளர் களுக்கு தலா ரூ.5 ஆயிரம் என இரு முறை நிவாரண நிதியாக வழங்கி உள்ளது. பஞ்சாப் அரசு ரூ.3 ஆயிரம் நிவாரண நிதியாக இரு முறை வழங்கி உள்ளது. அதேபோல் உத்த ரப்பிரதேச அரசும் கட்டிட தொழிலாளர் களுக்கு தலா ரூ.1000 என மூன்று மாதத்திற்கு வழங்கி உள்ளது. இவற்றை ஒப்பிடும் போது தமிழக அரசு கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிவாரணத் தொகை மிக, மிக குறைவானது ஆகும். எனவே தமிழக கட்டிட தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தித் தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தங்கள் பதிவை புதுப்பிக்காத தொழிலா ளர்களுக்கும் இந்த தொகையை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி யிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் புதனன்று விசார ணைக்கு வந்தது, அப்போது மனு தொடர் பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.