சென்னை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அறிகுறிகள் உள்ள மாதிரிகள் வருகை எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் 61,262 கொரோனா மாதிரிகள் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் மொத்த கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 25,97,862 ஆக உயர்ந்துள்ளது. 61,262 மாதிரிகளில் பரிசோதனைக்கு 59,437 மாதிரிகள் உட்படுத்தப்பட்டன. இதிலிருந்து 5,864 மாதிரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கொரோனா பரிசோதனை 25,01,919 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பரிசோதனை கூடங்களில் எந்த மாற்றமும் இல்லை. பழையபடி 119 ஆக உள்ளது.