சென்னை, ஜூலை 12- சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும் என்று மாநகராட்சி ஆணை யர் கோ.பிரகாஷ் தெரி வித்துள்ளார். சென்னை அசோக்நகரில் அமைக்கப்பட்டுள்ள காய்ச் சல் முகாம் மற்றும் நோய் தடுப்பு பணிகளை ஞாயி றன்று (ஜூலை 12) ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பிர காஷ் கூறியதாவது: சென்னையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள வீடுகளில் கழிவுகளை சேகரிக்க 5 பயோ மெட்ரிக் பை வழங்கப் படுகிறது. இதுவரை 300 டன் மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை எரிக் கப்பட்டுள்ளது. பொது மக்கள் தாங்கள் பயன்ப டுத்தும் முகக்கவசங்களை முறையாக, பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். ஊரடங்கு, அதிகளவில் பரிசோதனை, காய்ச்சல் முகாம் மூலம் தொற்று உறுதி யானவர்களை விரைந்து கண்டறிந்து அளிக்கப்பட்ட சிகிச்சை போன்றவற்றால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு குறைவ தால் நோய் தடுப்பு பணிகள் நிறுத்தப்படாது. தற்போ துள்ள அதே வேகத்தில் தடுப்பு பணிகள் மேற்கொள் ளப்படும். சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும். வங்கிகளில் தேவையற்ற சேவைகளை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி யில் 44 ஆயிரம் களப்பணி யாளர்கள் இருப்பதாகவும், அதில் 375 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 128 பேர் குணமடைந்துள்ளனர். தூய்மை பணியாளர்கள் முகக்கவசம், கையுறை இல்லாமல் வந்தால் ஒரு நாள் ஊதியம் பிடிக்கப்படும். இறந்த தூய்மை பணியா ளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.