tamilnadu

img

கொரோனா தடுப்பு பணிகள் சவாலாக உள்ளது

அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

செங்கல்பட்டு, ஜூன் 5 - செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் சவாலாக இருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் வெள்ளியன்று (ஜூன் 5)  மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்  பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டி யுள்ளது. இந்நிலையில் நோய்த் தொற்று தடுப்பு  பணிகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் செங்கல்  பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜான்லூயிஸ்  தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், செங்கல்  பட்டில் கொரோனா தொற்று பாதித்த 260க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு கிறது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக கண்கா ணிப்பில் இரண்டு கேர் சென்டர்கள் அமைக் கப்பட்டு தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார். செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் தடுப்பு பணிகளில் சவால்கள் அதிகம் உள்ளது. இருப்பினும் தடுப்பு பணிகளைத் தொடர்ந்து செய்து வரு கிறோம். 50க்கும் குறைவானோர் மருத்து வர்களின் ஆலோசனை படி, வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.

35 கர்ப்பிணிகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட 35க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், 37  குழந்தைகள், 8 டயாலிசிஸ் நோயாளி களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  முதல்வரிசை பணியாளர்களுக்கு இதுவரை யிலும்  கொரோனா தொற்று ஏற்படாத வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, மத்திய ஆய்வுக்குழு உறுப்பி னர் கணேஷ்குமார், செங்கல்பட்டு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  சிகிச்சைகளை ஆய்வு செய்தார்.