tamilnadu

img

அலட்சியமாக கொட்டி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பு கிட்டுகள் பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை, செப்.18- கோவையில் நியாய விலை கடையில் விநியோகம் செய்ய கொண்டு வந்த கொரோனா பாதுகாப்பு கிட்டுகள்  அலட்சியாக வெட்ட வெளியில் கொட்டி வைக்கப்பட்டி ருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய  விலை கடைகள் மூலம் முகக்கவசம்,வைட்டமின் சி-மாத்திரை, ஆர்சனிக் அல்பம், கபசுரக்குடிநீர் பொடி அடங் கிய கிட்டுகளை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை கரும்புக்கடை  இலாஹி நகர்,  வள்ளல் நகர், பகுதிக்கு உட்பட்ட நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்கான கொரோனா  தடுப்பு கிட்டுகள் உரிய பாதுக்காப்பின்றி சாலை ஓரத்தி லேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திடீரென மழை பெய்தால் அனைத்து கிட்டுகளை மழையில் நனைந்து  வீணாக வாய்ப்பு உள்ளது.   இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரேசன் கடை வெளியே சாலை ஓரத்திலேயே இந்த கிட்டு களை கொட்டி வைத்துள்ளதால் வாகனங்கள் கடந்து செல்லும் போது மண் தூசிகள் கிட்டுகள் மீது விழுகிறது. மழை வந்தாலும் நனைந்து வீணாகிவிடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.