tamilnadu

img

கொரோனா பாதிப்பு இல்லை: அமைச்சர்  

சென்னை,பிப்.9- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறி வித்துள்ளார்.  சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்த 2 மாணவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதோடு தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் இதே அறிகுறியுடன் அங்கு சேர்க்கப்பட்டனர். இவர்கள் 4 பேரையும் தனி வார்டில் வைத்து கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை கள் மேற் கொள்ளப்பட்டன. முதல் கட்ட சோதனையில் அவர்கள் சாதாரண காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதில் 3 பேர் ஏற்கனவே மருத்துவமனையிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகிவிட்டனர். ஒருவர் ஞாயிறன்று (பிப்.9மூ டிஸ்சார்ஜ் ஆனார். இதனால் பொது மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம், தமிழக சுகாதாரத்துறை முழு எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இவ்வறு  சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது  டுவிட்டர் பதிவில் அறிவித்துள் ளார்.