சென்னை
தமிழகத்தை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு என்ற வார்த்தைக்கு ஓய்வு அளித்து தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. தொடக்கத்தில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள முக்கியமான மாவட்ட நகர பகுதிகளில் கொரோனா தனது ஆட்டத்தை துவங்கியது. தற்போது மக்கள் நெருக்கம் என்னவென்று அறியாத கிராம பகுதிகளை புரட்டியெடுத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,175 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 2,73,460 ஆக உயர்ந்துள்ளது. தமிழக கொரோனா மரண வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஒரேநாளில் 112 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது.
இன்று (புதன்) 6,031 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 54,184 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் 40 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.