tamilnadu

img

கொரோனா 2-வது அலையால் பாதிப்பு.... மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக.... மத்திய, மாநில அரசுகளுக்கு சிஐடியு வலியுறுத்தல்....

சென்னை:
கொரோனா 2-வது அலையால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பெரிதும்சிரமத்தில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா 2-வது அலையால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழகத்தில் கொரோனாஇரண்டாம் அலையின் தீவிரம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இரவு நேரம் மற்றும்ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. இருப்பினும் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலாத்துறை, வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மால் கள், சினிமா தியேட்டர் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் முடிதிருத்துவோர், அழகு நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நிலைமை மோசமடைந்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கைநோக்கி செல்லும் அபாயத்திற்கு தமிழகத்தைஇட்டு சென்றுள்ளது.

முழு ஊரடங்கினால் ஒட்டுமொத்த தமிழகமும் மரணகுழியில் விழும் அபாயம் தலைதூக்கியுள்ளது. ஆனால் மத்திய-மாநில அரசுகள் இந்த ஆபத்தை உணராத நிலையே உள்ளது.தமிழகத்தில் 5லட்சம் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிசெய்து வந்தனர். தற்போது இவர்களில் கொரோனா அச்சம் காரணமாக 4 லட்சத் துக்கு மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊருக்குசென்றுள்ளனர்.கொரோனா வைரஸ் இந்திய மக்களுக்குபெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித் துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் அனைத்து மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. மக் களை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசோ மக்களை காக்கும் பொறுப்பைகாட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்க முனைந்திருப்பது “ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக” உள்ளது.தில்லி உயர்நீதிமன்ற வார்த்தைகளைவிட மத்திய அரசை சாடுவதற்கு வேறு வார்த்தைகள் தேவையில்லை “பிச்சை எடுங்கள், திருடுங்கள், ஆனால் மக்கள் உயிரைக் காப்பா றுங்கள்” எனக் கூறி உள்ளதே மத்திய அரசின்நிர்வாக சீர்கேட்டை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.படுக்கை வசதிகள் இல்லாமை, ஆக்சிஜன்பற்றாக்குறை, அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு என சிக்கல்கள் நிறைந்த இந்த நேரத்தில் மத்திய-மாநில அரசுகள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனே பிரதான பணியாக கருதுகின்றன.ஆகவே, தமிழகம் மீண்டும் பொது முடக்கத்திற்கு தள்ளப்பட்டால் ஒட்டுமொத்த மக்களும், தொழிலாளர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள், இதனைக் கருத்தில் கொண்டுஅனைத்துத்தரப்பு மக்களும் வேலையிழந்து, வருமானமிழந்து தவிக்கின்ற நிலையில், தொழிலாளர்களுக்கும் அவர்தம் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசுரூ.7500-ம், மாநில அரசு ரூ.5 ஆயிரமும் மாதம்தோறும் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.