tamilnadu

சிறப்பு செலவின பார்வையாளர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் விநியோகிக்கப் படுவதாக வந்த புகார்களை அடுத்து, அவற்றை தடுப்பதற்கு சிறப்பு செலவின பார்வையாளராக மது மகாஜன் என்பவரை தேர்தல் ஆணையம் நியமித்திருந்தது. ஒவ்வொரு தொகுதிகளிலும் 2 செலவின பார்வையாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பணியை ஒருங்கிணைக்க ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி மது மகாஜன் நியமிக்கப்பட்டார்.

தமிழகம் வந்துள்ள மகாஜன், தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.