tamilnadu

இறுதித்தேர்வில் அனைத்து மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்துக: எஸ்.எப்.ஐ

சென்னை:
இறுதியாண்டு மாணவர்களின் இறுதித் தேர்வு குறித்தான பிரச்சனையில் அனைத்து மாணவர்களின் தேர்ச்சியையும் உறுதிப்படுத்தவேண்டும் என்று  தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகத்தையும் இந்திய மாணவர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய மாநில அரசுகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை இன்று எடுக்கவில்லை. நோய்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிபுணர்களின் கருத்தையும் எதிர்கட்சிகளின் ஆலோசனைகளையும் கேட்க மறுத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாய் உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம்பாதிக்கப்படும் நாடாக இந்தியா மாறிப்போனது. பல நாடுகள் ஊரடங்கை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு வந்து கொண்டிருக்கும் சூழ
லில் நாம் மட்டும் கொரோனாவோடு வாழ பழகவேண்டும் என இலவச அறிவுரைகளை மத்திய,மாநில அரசுகள் வழங்குகிறது.மேலும் இக்காலகட்டங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள நிலையில் எதையும் காதில் வாங்காமல் மத்திய அரசு மாணவர்களுக்கான பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதிபருவத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என கூறுவது ஏற்புடையதாக இல்லை. கடந்த ஆறுமாதங்களாக எந்தவித பாடமோ, வகுப்போ நடக்காத சூழலில் தேர்வு என்பது அறிவுக்கு உகந்ததாக தெரியவில்லை. மேலும் இதற்கு தீர்வாக இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்ச்சியை அசைன்மென்ட் (ஹளளபைnஅநவே வநளவ) மூலம் வழங்க முன் வரலாம் என கூறியுள்ளது.

தமிழகத்திலும் தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்ச்சியையும் மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தில் கற்றிருக்க வேண்டியதாக கருதப்படும் கேள்விகளை இணையத்தை பயன்படுத்தி அனுப்புவதன் மூலம் மாணவர்களும் தங்களுக்கான பாடநூலில் ஆய்ந்துணர்ந்து எழுதுவதற்கான வாய்ப்பாக இது அமையும்.மேலும் தற்போது பல பல்கலைக்கழகங்கள் கேள்வித்தாள்களை மாணவர்களுக்கு அனுப்பி குறிப்பிட்ட நேர இடைவெளியில் வீட்டிலிருந்தே எழுதி புகைப்படம் எடுத்து முதலில் இமெயிலிலும் பிறகு தபாலிலும் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது. பல கிராமப்புற மற்றும் மலைபகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போதிய இணைய சேவை கிடைப்பதில்லை எனவே இதற்கான நேரத்தை கூடுதல்படுத்த வேண்டும். அதாவது காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் என்ற வகையிலும், இமெயிலில் 25 எம்பிக் குள் மட்டுமே நகலெடுத்து அனுப்ப இயலும் என்பதால் எழுதியவற்றை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் குறைந்தது இரண்டு நாட்கள் அவகாசமும் வழங்க வேண்டும். மேலும் ஏற்கனவே மாணவர்கள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தியுள்ள நிலையில் தற்போது மாணவர்களே இணையம், விடைதாள் உள்ளிட்டவற்றிக்கு செலவு செய்ய வேண்டியுள்ளதால் தேர்வுக்காக கட்டணத்தை அரசு மாணவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங் கத்தின் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.