tamilnadu

img

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் கண்டித்து

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் கண்டித்து

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை விபி ஜி ராம் ஜி என மாற்றி அந்த திட்டத்தை சீரழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவொற்றியூர் தபால் நிலையம் முன்பு சட்ட நகலை கிழித்து எரியும் போராட்டம் செவ்வாயன்று (ஜன. 6) நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் நடராஜன் தலைமையில் மாவட்டச்செயலாளர் எஸ்.ராணி, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாதர்சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், சங்க நிர்வாகிகள் மகேந்திரன், வி.ஜெயந்தி, எஸ்.தில்ஷாத் பேகம், பிரேமா கீதா, ஜெ.ரவி, திருமணி, செல்வன், டி.சாரதி, ஆதிகேசவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில்  சட்ட நகலை கிழிக்கும் போராட்டம் 4 மையங்களில் நடைபெற்றது. இதில் காஞ்சி ஒன்றியத்தில் மாவட்டத்தலைவர் பி.பி.பாலாஜி, உத்திரமேரூர் ஒன்றியத்தில் மாவட்டச்செயலாளர் வி.முனுசாமி,திருபெரும்புதூர் ஒன்றியத்தில்  மாவட்டபொருளாளர் வி. ஹரிகிருஷ்ணன்,   படப்பையில் ஒன்றிய செயலாளர்  ராமு, காஞ்சி ஒன்றியத்தில் விவசாய சங்கம் சார்பில் சாரங்கன், உத்திரமேரூர் ஒன்றியத்தில் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஒன்றிய அரசைக் கண்டித்து திருப்பத்தூர் நகராட்சி அரசினர் தோட்டம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் காமராஜ், காசி, மாவட்ட துணை செயலாளர்கள் சுதர்சன், அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளின் வேலை உரிமையை பறிக்கும் விபி ஜிராம்ஜி  சட்டநகலை எரிக்கும் போராட்டம் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காட்பாடி, கே.வி.குப்பம், கணியம்பாடி ஆகிய 3 மையங்களில் நடைபெற்றது. வீரபாண்டியன்  (மாநிலக்குழு உறுப்பினர்), சுகுமாரன்(ஒன்றிய தலைவர்) தலைமையில் மாவட்ட செயலாளர் கே.ஜெ.சீனிவாசன்,  பொருளாளர் குருமூர்த்தி, துணைத்தலைவர்கள் எஸ்.டி.சங்கரி, கோபால.ராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், காட்டாங்குளத்தூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது. மதுராந்தகத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.வெள்ளிக்கண்ணன், காட்டாங்குளத்தூரில் மாவட்ட தலைவர் எஸ். தாட்சாயணி திருக்கழுக்குன்றத்தில் மாவட்ட பொருளாளர் கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் சட்ட நகலை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை, ஒன்றிய மோடி அரசு திட்டமாக மாற்றிய சட்டநகலை கிழித்தெறியும் போராட்டம் செவ்வாயன்று (ஜன 6) திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைபெற்றது. மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் பழைய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், செவ்வாயன்று (ஜன 6), திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம், பூண்டி, எல்லாபுரம் ஆகிய இடங்களில் உள்ள பிடிஒ அலுவலகங்கள் முன்பு மோடி அரசின் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நடைபெற்றது.