tamilnadu

விவசாயிகள் விரோத சட்டங்களை கண்டித்து... 1ம் பக்கத் தொடர்ச்சி

தெரிவிக்கும் முறை” என்பது, மாநிலங்களின் கையில் உள்ள பட்டியல் 14, 15, 16 மற்றும் 18 - மாநிலத்திற்குள் நடக்கும் வர்த்தகம், வணிகம்(பட்டியல் 26) போன்ற அதிகாரங்களையும் மத்திய அரசே கைப்பற்றிக் கொள்ளும் மேலாதிக்கப் போக்கு என்றே  இந்தக் கூட்டம்கருதுகிறது.

பறிபோகும் சந்தைச் சுதந்திரம்
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’திட்டத்திலும் ஊழல் முறைகேட் டிற்கு வித்திட்டுள்ள பா.ஜ.க., அதிமுக அரசுகள் - இந்த சட்டங்களின்  மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது  வெளிப்படையாகவே தெரிய வருகிறது. சிறு குறு நடுத்தர விவசாயிகளுக்கு, அவர்களின் விளை பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய விலைக்கு, மாநிலத்தில் உள்ளவேளாண் விற்பனை ஒழுங்கு முறைக் கூடங்கள் மற்றும் உழவர் சந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி - விவசாயிகளின் சந்தைச் சுதந்திரத்தைப் பறிக்கும் உள்நோக்குடன் - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு “பண்ணை ஒப்பந்த” வாய்ப்பைக் கொடுத்து, விளைபொருட்களை “இருப்பு வரம்பு” ஏதுமின்றி சேமித்து வைத்துக் கொள்ள -  ஏன், பதுக்கிவைத்துக் கொள்ள வழி வகுக்கும் இந்தச் சட்டம், பொது நலனுக்கும், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்கும் எதிரானது என்று இந்தக் கூட்டம் உறுதியாக  நம்புகிறது.  விவசாயத்தை மறைமுக மாக வருமான வரி வரம்பிற்குள் இழுக்கும் திட்டமிட்ட முயற்சி இது என்றும் இக்கூட்டம் அச்சம் தெரிவிக்கிறது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு
“விவசாயம் சம்பந்தமான இந்த மூன்று சட்டங்களும், விவசாயிகளிட மிருந்து விளை பொருள்கள் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு விடுகின்றன. அதன்மூலம், உணவுப் பாதுகாப்பு காவு கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் விலைப் பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் கை விட்டு, விவசாயிகளை தனியார் வர்த்தகப் பெரும் புள்ளிகளிடம் தள்ளிவிடுகிறது” என்று, அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளி யிடப்பட்டிருக்கும் அறிக்கையை இந்தக் கூட்டம் வழிமொழிகிறது.  செப்டம்பர் 25அன்று நடைபெற விருக்கும் அவர்களது போராட்டத் தை வரவேற்கிறது.

துணைபோகும்  அதிமுக அரசுக்கு கண்டனம்
ஏற்கனவே பீகாரில் தோற்று விட்ட இந்த “மாதிரியை”- தமிழகத்தில் திணித்து விவசாயிகளை வஞ்சிக்கும் பா.ஜ.க. - அதிமுக அரசுகளின் போக்கு மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல- சூழ்ச்சி யான இந்த சட்டங்களின் வளையத்திற்குள் ஏழை விவசாயிகளைசிக்க வைத்து, அவர்களைத்தொடர்ந்து  துன்பங்களுக்கு உள்ளாக்கி, கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் மேலும் கேள்விக்குறியாக்கும் முயற்சி என்பதால், இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை  வலியுறுத்தியும் - அதற்கு துணைபோகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக்கண்டித்தும்;

மாபெரும் ஆர்ப்பாட்டம்
செப். 28 (திங்கட்கிழமை) அன்றுகாலை 10 மணி அளவில் மாவட்டத் தலைநகரங்களிலும் - நகராட்சி  மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான  அனைத்துக்கட்சிகளின் சார்பில், “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”  நடத்துவது என்று இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

எச்சரிக்கை மணி
அனைத்து விவசாய அமைப்புகளும் - தொழிலாளர் அமைப்புகளும் - வணிக சங்கங்களும், விவசாய பெருங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியடிக்க வேண்டும் என்றுஅனைத்துக் கட்சிகளின் இந்தக்கூட்டம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.