சென்னை, ஆக. 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயற் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஜனார்த்தனன் உடல் சனிக்கிழமையன்று (ஆக.8) தகனம் செய்யப்பட்டது. அவருக்கு வயது 77. கொரோனா தொற்றால் உயிரிழந்த அவரது உடல் அனாகாபுத்தூர் மயா னத்தில் தகனம் செய்யப் பட்டது. செங்கொடி போர்த்திய அவரது உட லுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வேல்முரு கன், மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.தாமு, பல்லாவரம் பகுதிச் செய லாளர் எம்.சி.பிரபாகரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஹேமக் குமார், சிவசங்கர், சதா சிவம், சிஐடியு மாநில துணைத்தலைவர் ஏ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர்.