மதுரை, பிப்.27- திரிபுரா மாநிலத்தில் தீவிர வாத தாக்குதலில் உயிரிழந்த பேரையூர் பழையூரைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் 21 குண்டு கள் முழங்க தகனம் செய்யப் பட்டது. மதுரை மாவட்டம் பேரை யூர் அருகே உள்ள பழை யூரை சேர்ந்தவர் ராஜேந்தி ரன். இவரது மகன் கமல ரங்கன் (38). திரிபுரா மாநிலம் அகர்தலாவிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள சி.கே. பாடி மலைபகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றினார். கடந்த புதனன்று தீவிரவாதிகள் தாக்குதலில் கமலரங்கன் மரணம் அடைந்தார். கமல ரங்கன் உடல் சொந்த ஊரான பழையூருக்கு கொண்டு வரப் பட்டு, பொதுமக்கள் அஞ்சலி காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உசி லம்பட்டி சட்டமன்ற உறுப்பி னர் அய்யப்பன், முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிர முகர்கள், பேரையூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா, சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிமொழி உட்பட காவல்துறை அதிகாரி களும், ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்களும், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மதுரை ஆயுதப் படை காவலர்கள் 21 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.