சென்னை:
தோழர் முத்தமிழ் செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு அஞ்சலி செலுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர். கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் எஸ்.முத்தமிழ்செல்வன் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மின் வாரியத்தில் பணியாற்றியவர்,மின்வாரிய சிஐடியு தொழிற்சங்கத்தில் மாவட்ட பொறுப்பேற்று செயல்பட்டவர். ஓய்வுபெற்ற பின்னர் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் பொறுப்பை ஏற்று கரும்பு விவசாயிகளுக்கு பணப்பாக்கியை பெற்றுத்தருவதற்கும் கரும்பு விவசாயிகள் நலன்களை பாதுகாப்பதற்கும் எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட கோரி கரும்பு விவசாயிகளை அணி திரட்டி பல போராட்டங்களை நடத்தினார். கரும்பு விவசாயிகளை அமைப்பாக அணி திரட்டிட ஆதிமூலம் , அண்ணாதுரை உள்ளிட்ட சக நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றினார்.
அவரது மறைவு கரும்பு விவசாயிகள் சங்கத்திற்கும் விவசாய இயக்கத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.முத்தமிழ் செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள் கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
தலைவர்கள் இரங்கல்
அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின்பொதுச் செயலாளர் என்.கே. சுக்லா, விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய பொருளாளர் கிருஷ்ணபிரசாத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், கடலூர்மாவட்டச் செயலாளர் ஜி . மாதவன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.