tamilnadu

img

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் அறைகளில் சிசிடிவி கட்டாயம் : தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை அதிரடி உத்தரவு...

சென்னை
தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய விவகாரத்தை தொடர்ந்து 10,11,12 ஆம் வகுப்பு வினாத்தாள்களை வைக்கும் அறைகளில் சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறைகளில் இரட்டை பூட்டுக்கொண்டு பூட்டப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து காவலர் பணியில் இருக்க வேண்டும். பொதுத்தேர்வு மையங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பாளராக இருக்க கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்களே தேர்வு பணியில் ஈடுப்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுத்தேர்வுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.