tamilnadu

வாக்குப்பெட்டி அறைக்கு சிசிடிவி கேமரா

திருவண்ணாமலை,ஏப்.22-திருவண்ணாமலை மக்களவை தொகுதியில், 1,717 வாக்குச்சாவடி, ஆரணி மக்களவை தொகுதியில், 1,756 ஓட்டுச்சாவடி ஆகியற்றில், வாக்குப்பதிவு நடந்தது. இங்கு, வாக்குப்பதிவு செய்யப்பட்ட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அவை, வாக்கு எண்ணிக்கை மையமான, திருவண்ணாமலை ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மற்றும், சண்முகா தொழிற்சாலை, அரசினர் மேல் நிலைப்பள்ளி, ஸ்டிராங் ரூமிலும் வைத்து சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் வரை, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு எவ்விதஅசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்க, சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க, கேமரா பொருத்தும் பணி ஞாயிறு அன்று நடைபெற்றது. 


காலமானார்


சென்னை, ஏப். 22-அஞ்சல் 3 சங்கத்தின் முன்னாள் செயல் தலைவர் என்.கோபாலகிருஷ்ணன் திங்கட்கிழமை (ஏப். 22) மதியம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுஉறுப்பினர் பி.சம்பத், மத்திய அரசு ஊழியர் மாகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன், ரகுபதி, ஆர்.பி.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் வேப்பேரி வல்லம் பங்காரு தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஏப். 23) மதியம் 1.30 மணியளவில் புறப்பட்டு, ஓட்டேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.