மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.லாசர் போர்டிஸ் மலர் மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய கடந்த 8ந் தேதி ஓய்வு பெற்றார். போர்ட்டிஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, பொருளாளர் கே.சி.மோகன் சிங் உள்ளிட்டோர் பேசினர்.