tamilnadu

img

முறைகேடு புகார்.... ரூ.668 கோடி  டெண்டரை ரத்து செய்தது வீட்டுவசதி வாரியம்....

சென்னை:
 சென்னை நந்தனத்தில் வீட்டுவசதி வாரிய அலுவலகம், தந்தை பெரியார் மாளிகையை இடித்து புதிய கட்டடம்  கட்டவும் புதிதாககட்டப்படும் கட்டடங்களை இணைத்து  பாலம் கட்டவும் சேர்த்து டெண்டர் விடப்பட்டது. பெரியார் மாளிகை -  வீட்டுவசதி வாரியகட்டடம் இரண்டுமே உறுதியாக உள்ளதாக பல்வேறு நிபுணர்கள் சான்றளித்துள்ளனர். உறுதியாக உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவது முறைகேடானது என்று வீட்டுவசதி வாரியத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பூச்சி முருகன் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் மனுஅளித்தார்.  டெண்டர் விளம்பரம் ஜனவரி 12 அன்று நாளிதழ்களில் வெளியான மறுநாளே கட்டடங்களை இடிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. வீட்டுவசதி வாரிய டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதால் ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்து,விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ரூ.668 கோடி மதிப்புள்ள டெண்டரை  வீட்டுவசதி வாரியம்  ரத்து செய்துள்ளது.