tamilnadu

வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக 90 லட்சம் மோசடி

காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னை, மார்ச் 20- வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித்  தருவதாக 30 பேரிடம் 90 லட்ச ரூபாய்  பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறை வானர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  அம்பத்தூர் எம்.கே.பி. நகரில் வசிக்கும்ஜூலி யன் என்பவர் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: அயப்பாக்கம் தர்மா நகரில் வசிக்கும் எஸ்.எஸ்.ஆர்.பிரிட்டோ, அவருடைய மனைவி புனிதா ராஜாலட்சுமி அவர்களது மகன் இனியன் பிரமின் ஆகியோர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள அதி காரி தங்களுக்கு வேண்டபட்டவர் என்றும்  அதனால் அவர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் வீட்டுவாதி  வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட தாக சொல்லி அவரின் பெயரில் வழங் கப்பட்ட அடையாள சீட்டை எங்களுக்கு காண்பித்தார்கள். மேலும் உங்களுக்கு வேண்டும் என்றால்  நீங்களும் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அயப்பாக்கத்தில் வீடு ஒதுக்கிடு  செய்து தருகிறோம் என்று கூறினார்கள். அதை நம்பி நானும் கடந்த 2016ஆம் ஆண்டு பிரிட்டோவிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். அதேபோல் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள், எனது நண்பர்கள் என 30 பேர் மொத்தம் 90 லட்ச ரூபாயை பிரிட்டோவிடம் வழங்கினோம். 4 நாட்களுக்கு பிறகு அவரது வீட்டிற்கு சென்று அயப்பாக்கத்தில் 550 சதுரடியில் வீடு ஒதுக்கப்பட்ட ரசீதை பெற்றுக் கொண் டோம். கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம்  வீட்டுவசதி வாரியம் அளித்த ஸ்மார்ட் கார்டை பிரிட்டோ வீட்டிற்கு சென்று பெற்றுக்  கொண்டோம். பின்னர் வீடு ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் சிலர் வீடு வேண்டாம் பணம் கொடுங்கள் என்று கேட்டதற்கு பிரிட்டோ காசோலை கொடுத்தார். வங்கியில் பணம் இல்லை என அந்த காசோலை திரும்பி வந்து  விட்டது. பின்னர் வீட்டிற்கு சென்று பணம்  கேட்ட போது, 4 நாட்களில் தருவதாகக் கூறி னார். பிறகு அவசரமாக ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது வந்து பணத்தை தருகிறேன் என்று கூறினார். 10 நாட்கள் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டிருந்தது. அவரது வீட்டின் அருகில் இருந்தவர்கள் அவர் குடும்பத்து டன் தலைமறைவாகி விட்டதாக தெரி வித்தனர். அவரை இதுவரை எங்கு தேடி யும் கிடைக்கவில்லை. எனவே 30 பேரிடம் பணத்தை பெற்றுக்  கொண்டு ஏமாற்றிய பிரிட்டோ மற்றும் அவ ரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.