சென்னை, மே 1- தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர் களுக்கு, அரசு அளித்த வட்டி தள்ளுபடி சலுகை செப்டமர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட் டுள்ள அறிக்கை யில், “வட்டி சுமையின் காரணமாக, விற்பனைப் பத்திரம் பெறாமலிருந்த, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, மாதாந்திர தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முத லாக்கத்தின் மீதான வட்டி ஆகியவற்றினை முழு வதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியா சத்தின் மீதான வட்டியினை, வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஏப்ரல் 15ஆம் தேதி ஆணை பிறப்பித்தது.
அரசின் இச்சலுகையினை முதற்கட்டமாக, ஒருவருட காலத்திற்கு அதாவது (26.8.2018) வரையி லும், பின்னர், இருமுறை காலநீட்டிப்பு செய்யப் பட்டு, எதிர்வரும் (31.3.2020) அன்றுடன் இச் சலுகை முடிவடைய இருந்தது. இந்நிலையில், அரசின் இச்சலுகையினை, கால நீட்டிப்பு செய்யுமாறு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
2020ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொட ரில், மார்ச் 24 ஆம் தேதி அன்று நடை பெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையின் போது, நடப்பில் உள்ள, வட்டித் தள்ளுபடி திட்டத் தினை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகை யில், இச்சலுகையினை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய, துணை முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
துணை முதலமைச்சர் அவர்களின் ஆணை யின்படி, வட்டித் தள்ளுபடி திட்டத்திற்குத் தகுதி யான ஒதுக்கீடுதாரர்கள், உடனடியாக சம்மந் தப்பட்ட கோட்டம், பிரிவு அலுவலகங் களை அணுகி, வட்டித் தள்ளுபடி நீங்கலாக, நிலுவைத் தொகையினை, ஒரே தவணையாக, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்தி, விற்ப னைப் பத்திரம் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.