சென்னை,மார்ச்.19- நாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிக்ழ்நாட்டில் பல பகுதிகளி தெருந்0ஆய்கள் கடித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உரிய இழப்பீடு வழங்க்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
மாடுகளுக்கு ரூ.37,500, ஆடுகளுக்கு ரூ.6,000, கோழிகளுக்கு ரூ. 200 வழங்கப்படும் எனவும் தெருநாய் கடித்து உயிரிழந்த 1149 பிராணிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவிப்பு.