தோழர் ப.ஜீவானந்தம் நினைவு தினம் அனுசரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மறைந்த தோழர் ப.ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி சாரம் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று ப. ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
