சென்னை, மே 7-தோழர் கலை இலக்கியா மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்திருக்கிறது.இந்திரா என்னும் இயற் பெயர் கொண்ட எழுத்தாளர் கலை இலக்கியா (42), தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தில் பிறந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். இணையர் காமுத்துரை. இரு மகன்களுடன் தேனி மாவட்டம் வீரபாண்டியில் வசித்து வந்தார். பள்ளிக் காலத்திலிருந்தே எழுதி வந்த கலை இலக்கியா தமுஎகச முன்னோடிகளில் ஒருவரான தோழர் வெண்மணியால் அடையாளம் காணப்பட்டவர். மறைந்த தோழர் இதயகீதன் நடத்தி வந்த அக்கினிக் குஞ்சு இதழில் 1990களில் இவரது கவிதைகள் வெளியாகின. இலக்கியச் சிற்றிதழ்கள் பலவற்றிலும் கவிதைகளையும், சிறுகதைகளையும் தொடர்ந்து எழுதி வந் தார். இமைக்குள் நழுவியவள், பிரம்ம நிறைவு, என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன், பெண்மைத் தினவு ஆகிய கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்டு எட்டு நூல்களை எழுதியுள்ள இவர் மேடைப்பேச்சிலும் ஆற்றல் வாய்ந்தவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகியாகச் செயல்பட் டார். தற்போது தமுஎகச தேனி மாவட்டப் பொருளாளராகவும், மாநிலக்குழு உறுப் பினராகவும் செயல்பட்டு வந்தார். 2018 ஜூன் மாதம் புதுச் சேரியில் நடைபெற்ற மாநில மாநாட்டில், சமகால அரசியல் சூழலை மையப்படுத்தி அவர் வாசித்த கவிதை பலரது பாராட்டுகளையும் பெற்றது. அதுதான் அவர் பங்கேற்ற இறுதி நிகழ்வு. கடந்த பத்து மாத காலமாக நுரையீரல் புற்றுநோயால் அவதிப் பட்டு வந்த தோழர் கலை இலக்கியா சிகிச்சை பலனின்றி மே 6 அன்று காலமானார். அஞ் சலி என்கிற ஒற்றைச்சொல் லால் கடந்து விட முடியாத பேரிழப்பாக அவரது மறைவை தமுஎகச மாநிலக் குழு கருதுகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் துயரில் தமுஎகச பங்கெடுக் கிறது என்று மாநிலத் தலைவர் சு.வெங்கடேசன்,பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா இருவரும் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்கள்.