சென்னை, ஜூன் 10- நகைச் சுவை நடிகர் கிரேஸி மோகன் உடல் நலக்குறைவு காரண மாக சென்னையில் தனியார் மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திங்களன்று(ஜூன்10) பிற்பகல் 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 66. மோகன் ரங்காச்சாரி என்ற இயற் பெயர் கொண்ட கிரேஸி மோகன் அடிப்படையில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டப் படிப்பை படித்த வர். கல்லூரிக் காலங்களில் சிறிய நாடகங்களை நடத்தியவர். தனது படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத் தும் அதில் மனமில்லை. சபாக்களில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார். சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்ளை நிகழ்த்தியிருக்கும் கிரேஸி மோகனை முதன் முத லில் தனது பொய்க்கால் குதிரைகள் படத்துக்கு வசனம் எழுத வைத்த வர் இயக்குநர் பாலசந்தர். பின்னர் கமலஹாசனுடன் சதி லீலாவதி படத்தில் வசனகர்த்தா வாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவரு டன் தொடர்ந்து காதலா காதலா, மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி,பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் உட்பட பல படங்களில் பணியாற்றி னார். 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றி யிருக்கிறார்.