பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கி யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"யுஜிசியின் புதிய விதிமுறைகள், துணைவேந்தர் நியமனங்கள் மீது ஆளுநர்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்குவதும், கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பதும், கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை, ஒற்றை ஆட்சி அதிகாரத்திற்கு வழிவகுக்கவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கவும் முயற்சி.
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு கையில்தான் கல்வி இருக்க வேண்டுமே தவிர, பாஜக அரசு நியமிக்கும் ஆளுநர்கள் கைக்கு போகக்கூடாது. நாட்டிலேயே உயர்கல்வியில் முன்னிலை வகிக்கும் தமிழ்நாடு இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.