சென்னை, ஆக.3- தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாக, செவ்வாயன்று (ஆக.4) முதல் வகுப்புகள் தொடங்கின. கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்க ளும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுடைய கல்வித் திறன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தனியார் பள்ளிகள் ஆன் லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. அரசு பள்ளியை பொறுத்த வரையில் ஏற்கனவே கல்வித் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து மாணவர்க ளுக்கு இதன் பலன் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் தொலைக்காட்சிகளின் வாயிலாக திங்களன்று (ஆக.3) முதல் பாடங்கள் வீடியோக்கள் மூலம் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு தனியார் சேனலுக்கும் ஒவ்வொரு வகுப்புகள் மற்றும் காலநேரம் போன்றவை ஒதுக்கப்பட்டு, அட்ட வணையாக போடப்பட்டு இத்திட் டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அட்டவணைப்படி தனியார் தொலைக்காட்சி மூல மாக, வீட்டிலிருந்தபடியே பாடங் களை படித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.