திருப்பெரும்புதூர்,மே 13- காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சோவல் இந்தியா என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு ரோபோ இயந்திரங்களை ஹவாசின் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது. இந்நிலையில், ஹவாசின் நிறுவனத்திற்கு சோவல் நிறுவனம் வழங்க வேண்டியபல கோடி தொகையை வழங்க வில்லை. பலமுறை கேட்டும் நிறுவனத்தில்இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் இந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, கடந்த மாதம் சோவல் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் எந்திரங்களை எடுத்துச் செல்ல வாகனங்களுடன் தொழிற்சாலைக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையர் தலைமையில் வந்தனர். அப்போது சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் ஹவாசின் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுதற்போது வரை தொழிற்சாலை செயல்பட்டுவருகின்றது.இந்நிலையில் கடந்த மாதம் எந்திரங்களை எடுக்க வந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆணையரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் இதுகுறித்து உரிய விசாரணைநடத்திடவும் உயர்நீதிமன்றம், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து திங்களன்று (மே 13) சிஐடியு மாவட்டத் தலைவர்எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் மற்றும் சோவல் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்டவர்களிடம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா, அவரது அலுவலகத்தில் வைத்துவிசாரணை மேற்கொண்டார்.மேலும் அன்றைய தினம் பணியிலிருந்த காவல்ஆய்வாளர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஹவாசின்நிர்வாகிகள் வழக்கறிஞர்ஆணையர் உள்ளிட்டவர்களை விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், ஜூலை 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.