சென்னை, ஜூன் 11 - பொதுப்போக்கு வரத்தை பாதுகாக்க கொள்கை போராட்டம் நடத்துவோம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்த ரராசன் அறைகூவல் விடுத்துள்ளார். அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் பா.பாலகிரு ஷ்ணன் பணி ஓய்வு பாராட்டு விழா திங்களன்று (ஜூன் 11) பல்லவன் சாலையில் நடை பெற்றது. இந்த விழாவில் அ.சவுந்தரராசன் பேசிய தாவது: போக்குவரத்துக் கழகத்தில் உழைப்புக்கு ஏற்றதை தராமல் சுரண்டுவ தற்கு எதிராக போராடிய நிலை மாறி,தற்போதுள்ள உரிமைகளை பாதுகாக்க வும், சட்டப்படி தொழி லாளிக்கு அரசு தர வேண்டி யவற்றை கேட்டும் போராடுகி றோம். முதலாளித்துவம் நீடிக்கிற வரை இது மாறி மாறி வரும். தொழிலாளி வர்க்கம் ஒற்றுமையாக நின்று போராடாமல் உயிர் வாழ முடியாது. மத்திய அரசு கொண்டு வர உள்ள மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தால் ஒன்றிரண்டு வாகனம் வைத்தி ருக்கும் சிறு உடமையா ளர்களை அழிவார்கள். பொதுத் துறையான போக்கு வரத்து துறை அழிக்கப்படும். இதனால் மக்களுக்கான குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் போக்குவரத்து வசதி இல்லாமல் போகும். இதற்கெதிரான கொள்கைப் போராட்டம் நடத்துவோம். பாலகிருஷ்ணன் போராட்டக் களத்தால் அறியப்பட்டவர். ஒழுக்கம், கட்டுப்பாட்டை அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். பணி ஓய்வு பெற்றுள்ள பால கிருஷ்ணன், தென்சென்னை மாவட்ட சிஐடியு பொறுப்புச் செயலாளராக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார். அவர் பணி சிறக்கட்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதி, நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதி, தீக்கதிர் வளர்ச்சி நிதி, போக்குவரத்து தொழிலாளி மாத இதழ் நிதி என தலா 5 ஆயிரம் ரூபாயை சவுந்தர ராசனிடம், பாலகிருஷ்ணன் வழங்கினார். இக்கூட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலா ளர் வி.தயானந்தம் தலைமை தாங்கினார். சிஐடியு துணைத்தலைவர் எம்.சந்திரன், போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறு முகநயினார், துணைத்தலை வர் ஏ.பி.அன்பழகன், சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, மத்திய பணிமனைத் தலைவர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் தனசேகரன் (எல்பிஎப்), எஸ்.கஜேந்திரன் (ஏஐடியுசி), எம். சுப்பிரமணியப் பிள்ளை (எச்எம்எஸ்), சீனிவாசன் (டிடிஎஸ்எப்) உள்ளிட்டோர் பேசினர்.