சென்னை:
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக அவைத் தலைவர் மசூதனன் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள்அஞ்சலிக்காக சென்னை தண்டையார் பேட் டையில் உள்ள அவரது இல்லத்தில்வைக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் பி.கே. சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ் சலி செலுத்தினர்.அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே. சசிகலா, முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.