சென்னை:
சிறப்பு குறை தீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் நிலை குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். குறை தீர் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் அதன் முன்னேற்றங்கள் பற்றி கேட்டறிந்தார்.இதற்கிடையே சிறப்புகுறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 72 ஆயிரத்து216 மனுக்கள் பெறப்பட்டதில்5 லட்சத்து 11 ஆயிரத்து186 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதில் 4 லட்சத்து 37 ஆயிரத்து 492 மனுக்கள் பல்வேறு காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் மீதமுள்ள 23 ஆயிரத்து 538 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இந்த வார இறுதிக்குள் முடிவு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.