tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் உருவப் படத்திற்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ன் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்(52). இவர் கடந்த 5ஆம் தேதி பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு இன்று நேரில் சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, அவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம், முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.