சென்னை:
காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங் களிலும், சென்னை பெருநகரின் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் வருகிற 20 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.