tamilnadu

img

மத்திய அரசே சட்டத்தை மீறுகிறது உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு 

சென்னை:
முதுநிலை மருத்துவப்படிப் பில் மத்திய ஒதுக்கீட்டில் இதரபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 50 சதவீத இடஒதுக்கீடுகோரி சென்னை உயர்நீதிமன்றத் தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக் கீடு சரியாக பின்பற்றப்படவில். மருத்துவப் படிப்பில்பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.இதனிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, காங்கிரஸ் , மதிமுக உள்ளிட்டகட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்தவிவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பானஇடஒதுக்கீட்டுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவலியுறுத்தி மனுவை திரும்பப் பெறுமாறு தமிழக அரசியல்கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து முதுநிலை மருத்துவப்படிப்பில் மத்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மற்றும் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மனு தாக்கல்செய்துள்ளார். மனுவில், ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடுவழங்காதது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தகுதியான மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதற்கு மத்தியஅரசே துணைபோகக் கூடாது. ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை மத்திய அரசே மீறுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.