கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தவெக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் விசாரணைக்காக வரும் ஜனவரி 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது
