tamilnadu

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சாதிய பாகுபாடு... இடதுசாரி அமைப்புகள் கண்டனம்....

சென்னை:
வேலை உறுதியளிப்பு திட்டத் தொழிலாளர்களை சாதி ரீதியாக வகைப்படுத் தும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் இடதுசாரி விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.இடதுசாரி விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை பாதுகாப்பு அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம் ஆக.5 அன்று சென் னையில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் பொதுச் செயலாளர் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் எஸ்.திருநாவுக்கரசு, வீ.அமிர்தலிங் கம், எஸ்.சங்கர், அ.து.கோதண்டம் ஆகியோரும் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அ.பாஸ்கர், நா.சாத்தையா, பி.கணேசன் ஆகியோரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கே.சாமுவேல் ராஜ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் மு.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்து வரும் தொழிலாளர்களை சாதி ரீதியாக வகைப்படுத்துவது, செலவுகளை கணக்கிடுவது, வேலைகளை தேர்வு செய்வது என பாகுபடுத்தும் சட்டவிரோதமான உத்தரவை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் பிப்ரவரி 2021ல் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொழிலாளர் ஒற்றுமைக்கு எதிரான பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட ஊரக வளர்ச்சித் துறை உத்தரவின் எதிர்மறை விளைவுகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.