சென்னை, ஜூலை 10- சென்னை மாநகராட்சி மண்டலம் 3க்குட்பட்ட வார்டு 24 இல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றார்கள். இங்கு குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சூரப்பட்டில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜன், தமிழ்ச்செல்வி, ரவிக்குமார், பச்சையம்மாள், எஸ்.தேவ ராஜன், ஆர்.தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து பகுதிச் செயலாளர் வி.கமலநாதன் கூறியதாவது:- குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் விநியோகம் தடைபட்டு ள்ளது. தொட்டி மூலம் வழங்கப்படும் குடிநீரும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும் கழிவு நீர் இணைப்பு வழங்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் வீட்டு வரி இரண்டு மடங்காக உயர்த்த ப்பட்டுள்ளன. இந்த பகுதியில் வசிப்பவர்கள் சாதாரன கூலித் தொழி லாளர்கள். எனவே உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். பிருந்தாவனம் நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் முறையாக வருவதில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் மருத்துவம் பார்ப்பதற்காக செல்ல வேண்டியுள்ளது. எனவே தினசரி மருத்துவர் வருவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் இங்குள்ள விளையாட்டுத் திடலில் சுற்றுச்சுவர் இல்லாததால் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. எனவே சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும். தெரு விளக்கு களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பகுதி மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறி னார்.